தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகப் புகழ்பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 'ஹாலிடே கார்னிவல்' - ramoji film city ticket price

உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரான ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஏப்ரல் 21 முதல் ஜூன் 5 வரை ஹாலிடே கார்னிவல் நடக்கிறது.

holiday-carnival-at-ramoji-film-city-to-start-from-21st-april
holiday-carnival-at-ramoji-film-city-to-start-from-21st-april

By

Published : Apr 19, 2022, 3:48 PM IST

Updated : Apr 19, 2022, 5:15 PM IST

ஹைதராபாத்: உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரான ராமோஜி ஃபிலிம் சிட்டி, குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட தகுந்த சுற்றுலா தலமாகும். இங்கு கலை நிகழ்ச்சிகள், அழகிய தோட்டங்கள், சாகச விளையாட்டுகள், மூவி மேஜிக், திரைப்பட செட்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இங்குள்ள பாகுபலி திரைப்பட செட், பட்டாம்பூச்சி பூங்கா, லிட்டில் இங்கிலாந்து இடங்களை காண தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

இந்த ஃபிலிம் சிட்டியில் வருடாந்திர நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கோடைக்காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் ஜூன் 5 வரை ஹாலிடே கார்னிவல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கார்னிவலில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனக் கலைஞர்களின் டான்ஸ் ஷோ, பொய்க்கால் குதிரை, ஐஸ் நடைப்பயணம், மாயாஜால நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுகுறித்த முழுவிவரங்களை காணலாம்.

  • ஹாலிடே பேக்கேஜ்கள்:

ஹாலிடே கார்னிவல் ஒரு நாள் பயணம்: (காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை)

இந்த பேக்கேஜில் சுற்றுலா பயணிகள், தீம் பார்க் சார்ந்த இடங்கள், தெரு கலை நிகழ்ச்சிகள், கார்னிவல் அணிவகுப்பு, ஸ்பேஷல் லைட்னிங் நிகழ்ச்சியில் காலந்துகொள்ளலாம். அத்துடன் ஏசி இல்லாத பேருந்தில், பாகுபலி உள்ளிட்ட திரைப்பட செட்கள், ராமோஜி மூவி மேஜிக், ஆக்‌ஷன் தியேட்டர், ஸ்பேஸ் யாத்ரா, சவாரிகள், வைல்ட் வெஸ்ட் ஸ்டண்ட் ஷோ, போராசுரா ஜஸ் நடைப்பயணம், மழை நடனம், பறவைகள் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, போன்சாய் தோட்டம் உள்ளிட்டவைகளை கண்டுகளிக்கலாம்.

ஹாலிடே கார்னிவல் ஸ்டார் அனுபவம்: (காலை 09.00 முதல் இரவு 08.00 வரை)

இந்த பேக்கேஜில், சுற்றுலா பயணிகளுக்கு பஃபே முறையில் மதிய உணவு வழங்கப்படும். அத்துடன் ஏசி பேருந்தில், பாகுபலி உள்ளிட்ட திரைப்பட செட்கள், ராமோஜி மூவி மேஜிக், ஆக்ஷன் தியேட்டர், ஸ்பேஸ் யாத்ரா & ஃபிலிம் துனியா, சவாரிகள், ஸ்பிரிட் ஆஃப் ராமோஜி, வைல்ட் வெஸ்ட் ஸ்டண்ட் ஷோ, டோம் ஷோ & லைட்ஸ் கேமரா ஆக்‌ஷன், பறவைகள் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, போன்சாய் தோட்டம், குழந்தைகளை கவரும் ஃபண்டுஸ்தான் பொழுது போக்குகள், போராசுரா ஜஸ் நடைப்பயணம், மழை நடனம், தெரு கலை நிகழ்ச்சிகள், கார்னிவல் அணிவகுப்பு உள்ளிட்டவைகளை கண்டுகளிக்கலாம்.

ஹாலிடே கார்னிவல் ஸ்டார் அனுபவம் (மாலை) (பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை)

இந்த சிறப்பு மாலைப் பேக்கேஜில் சுற்றுலா பயணிகள் ஏசி பேருந்து வசதியுடன், தெரு கலை நிகழ்ச்சிகள், கார்னிவல் அணிவகுப்பு, மாலை நேர பொழுதுபோக்கு, பஃபே மதிய உணவு அல்லது இரவு உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் புராண கலை நிகழ்ச்சிகள், மேஜிக்-ஆக்‌ஷன் தியேட்டர், ஸ்பேஸ் யாத்ரா & ஃபிலிமி துனியா, ஸ்பிரிட் ஆஃப் ராமோஜி, வைல்ட் வெஸ்ட் ஸ்டண்ட் ஷோ, டோம் ஷோ & லைட்ஸ் கேமரா ஆக்‌ஷன், பறவைகள் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, போன்சாய் தோட்டம் பாகுபலி செட் உள்ளிட்டவை காணலாம்.

ஹாலிடே கார்னிவல் ட்வைலைட் டிலைட் (பிற்பகல் 2.00 முதல் இரவு 8.00 வரை)

இந்த பேக்கேஜில் சுற்றுலா பயணிகளுக்கு மாலை நேர கலை நிகழ்ச்சிகளுடன் இரவு உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் ஆக்‌ஷன் தியேட்டர், ஸ்பேஸ் யாத்ரா & ஃபிலிமி துனியா, பாகுபலி செட் விசிட், ஹேப்பி, தெரு கலை நிகழ்ச்சிகள், கார்னிவல் அணிவகுப்பு உள்ளிட்டவைகளை கண்டுகளிக்கலாம்.

இந்த கார்னிவல் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை, புக்கிங் உள்ளிட்ட தகவல்களுக்கு www.ramojifilmcity.com என்ற இணையதளத்தை அணுகவும் அல்லது 1800 120 2999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இதையும் படிங்க:ராமோஜி ராவின் பேத்திக்கு பிலிம்சிட்டியில் திருமணம்; குடியரசு துணைத்தலைவர், சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்பு

Last Updated : Apr 19, 2022, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details