ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இன்று (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க உள்ளது. இந்த நிலையில், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நாடு சுதந்திரம் அடைந்தபோது வாசிக்கப்பட்ட 'ட்ரிஸ்ட் வித் டெஸ்டினி' (Tryst with destiny) என்ற உரையை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கவுன்சில் கட்டடம் என்று அழைக்கப்படக் கூடிய பழைய நாடாளுமன்ற கட்டடமானது 98 அடி விட்டம் கொண்ட மத்திய அறையைக் கொண்டுள்ளது.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அன்று சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த நாடாளுமன்றம், 1951 - 1952இல் தனது முதல் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. 1952ஆம் ஆண்டு ஏப்ரலில் இதற்கான முடிவு வெளியாகி, அதிகாரப்பூர்வ ஒரு அரசை இந்த நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது.
சன்சத் மார்க் பகுதியின் முடிவில் உள்ளதால் சன்சத் பவன் என்று அழைக்கப்படக் கூடிய இந்த நாடாளுமன்றம், மக்களவை, மாநிலங்களவை மற்றும் நூலக வளாகத்தையும் கொண்டுள்ளது. இதனை இன்னும் அழகூட்டும் விதமாக இதனிடையே அழகிய தோட்டமும் உள்ளது. அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முக்கிய அலுவலர்கள், தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற கமிட்டி பிரமுகர்களுக்கு உள்ளேயே குடியிருப்பும் உள்ளது.
1956ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டடத்தில் 2 தளங்கள் சேர்க்கப்பட்டு, அதன் இடவசதி அதிகப்படுத்தப்பட்டது. இந்திய ஜனநாயகத்தின் தன்மையை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக, 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற அருங்காட்சியமாக விரிவுபடுத்தப்பட்டது. அதிலும், நாள்தோறும் மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஒலி - ஒளி கானொளி, மிகப்பெரிய அளவிளான கணினி திரைகள் மற்றும் விர்ச்சுவல் தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் இந்த நாடாளுமன்றம் கொண்டுள்ளது. குறிப்பாக, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நுகர்வோர் நலத்துறை, உணவு மற்றும் பொது விநியோகம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். அதேநேரம், அப்போதைய பாஜக உடன் கூட்டணி வகித்த அதிமுக தனது ஆதரவை கைவிட்டதால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தனது ஆட்சியை இழந்தது.
பிரிட்டிஷ் - இந்தியாவின் இருதரப்பு கட்டடக் கலைகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த கட்டடத்தில்தான், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது உரையை நிகழ்த்தியது முதல் 1962ஆம் ஆண்டு சீனா - இந்தியா இடையேயான ஒருமனதானத் தீர்வு வரை பல பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன.