தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து மதமும், இந்துத்துவமும் ஒன்றல்ல- ராகுல் காந்தி - இந்துத்துவமும்

இந்து மதமும், இந்துத்துவமும் ஒன்றல்ல, வெவ்வேறானவை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Nov 12, 2021, 6:26 PM IST

டெல்லி : இந்து மதமும் இந்துத்துவாவும் வெவ்வேறு விஷயங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (நவ.12) தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் பரப்புரையான ‘ஜன் ஜாக்ரன் அபியான்’ (மக்கள் எழுச்சி திட்டம்) நிகழ்ச்சியை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

அப்போது ராகுல் காந்தி, “இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன வித்தியாசம், அவை ஒன்றாக இருக்க முடியுமா? அவை ஒன்றே என்றால், ஏன் அவர்களுக்கு ஒரே பெயர் இல்லை? அவை வெளிப்படையாக வேறுபட்ட விஷயங்கள்.

இந்து மதம் ஒரு சீக்கியரையோ அல்லது முஸ்லிமையோ அடிக்காது. ஆனால் இந்துத்துவம் அப்படியல்ல. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் உயிருடன் இருக்கிறது. அது துடிப்பானது, ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது.

இன்று, ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), பாரதிய ஜனதா ஆகியவற்றின் வெறுப்பு சித்தாந்தம், காங்கிரஸ் கட்சியின் அன்பான, பாசமுள்ள மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை மறைக்கிறது. காங்கிரஸ் சித்தாந்தம் மறைக்கப்பட்டுள்ளது. நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துச் செல்லாததால் கட்சியின் சித்தாந்தம் மறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏழைகளுக்கு எதிரான திட்டங்களை வெளிச்சம் போட்டுக்காட்ட நாடு தழுவிய அளவில், மக்கள் விழிப்புணர்வு திட்டம் பரப்புரை நவ.14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது” என்றார்.

இதையும் படிங்க : எனக்கு தமிழ்நாட்டு "குல்பி" மிகவும் பிடிக்கும் - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details