பெலகாவி: கர்நாடக மாநிலம், நிப்பானி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சதீஷ் ஜாரகிஹோலி காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் ஜாரகிஹோலி, இந்து என்ற சொல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவர் கூறுகையில், "இந்து என்ற சொல் எங்கிருந்து வந்தது? அது பாரசீகத்திலிருந்து வந்தது. அதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? அந்த சொல் எப்படி உங்களுடையதானது? வாட்ஸ்அப், விக்கிபீடியா போன்றவவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். அந்த சொல் உங்களுடையது அல்ல. அதை ஏன் பீடத்தில் போட நினைக்கிறீர்கள்?
இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். எங்கிருந்தோ கொண்டு வந்த ஒரு சொல் நம் மீது திணிக்கப்படுகிறது. இந்து என்ற சொல் ஆபாசமான பொருள் கொண்டது. அதன் உண்மை அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவீர்கள்.