தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல் - இந்து மாணவருக்கு மிரட்டல்

உத்தரப்பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவரை துப்பாக்கி முனையில் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என ஓர் இஸ்லாமிய மாணவர் கூறச் சொல்லி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்
இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்

By

Published : Oct 8, 2022, 9:01 AM IST

உத்தரப் பிரதேசம்:அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஓர் இந்து மாணவரைக் கடுமையாகத் தாக்கிய ஓர் இஸ்லாமிய மாணவர், அவரை துப்பாக்கி முனையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனச் சொல்லச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது.

புலாந்துசாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த கரன்வாஷ் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சாகேத் குமார். இவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் சக மாணவரான ரெஹ்வர் இவர் கட்டியிருந்த சாமிக் கயிற்றை அவிழ்க்கக் கூறி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததும், சாகேத்தை கத்தியை வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை எஸ்பி குல்தீப் குனாவட் கூறுகையில் , “சாகேத் பல்கலைக்கழகத்தில் சுலைமான் ஹாலில் இருந்துள்ளார். அப்போது ரெஹ்வர் போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், சாகேத் அணிந்திருந்த கலவாவை அவிழ்க்க மிரட்டியுள்ளார் ரெஹ்வர்.

மேலும், துப்பாக்கி முனையில் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ சொல்லும் படி மிரட்டியதாகவும் தெரிகிறது. இவர் தனது தங்கையையும் ஹிஜாப் அணியும் படி மிரட்டி வருவதாகவும் சாகேத் தெரிவித்தார்” என்றார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:உத்தரகண்ட் நிலச்சரிவு...26 உடல்கள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details