புதுச்சேரி:இந்து மதத்தை பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் புதுச்சேரியில் இன்று (செப் 27) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, இன்று காலை முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது.
அதேபோல் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.