மேற்கு வங்காளம்: இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தை பதிக்க வேண்டும் என அகில பாரத் இந்து மகாசபா நேற்று(அக்.21) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து , “நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி அளித்த பங்கு என்பது மகாத்மா காந்தியுட ஒப்பிடுகையில் சற்றும் குறைந்தது இல்லை.
அதனால் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் மாற்றியமைக்கப்பட வேண்டும். காந்தியின் படுகொலைக்குப் பின்னால் யார் இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது அவரது கொள்கையும், தத்துவமும் கொல்லப்பட்டு வருகிறது.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நாங்கள் காந்தியை ஒரு போதும் மகிசாசூரனாக உருவகப்படுத்த நினைக்கவில்லை. அந்த சம்பவம் அந்த நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல, தற்செயலாக நடந்ததே. அதை சர்ச்சையாக்கி வருபவர்கள் அந்த செயல்களைக் கைவிட வேண்டும்.