ஹைதராபாத்:பாரத் நிதி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 10ஆவது 'டிஜிட்டல் இந்து மாநாடு' தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (ஏப்.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்து என்பது புவியியல் அடையாளம். இமயமலை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்துக்களாக உள்ளனர். நமது நாடு அறிவு பூமி என்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
இந்தியா சிறந்த ஜனநாயக நாடு: இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, 'இந்து' என்ற வார்த்தையை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒருபோதும் கட்டுப்படுத்தக்கூடாது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருப்பது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பலத்தை அடையாளப்படுத்துகிறது" என்று பேசினார்.