கடந்த ஜூலை 26ஆம் தேதி அசாம்-மிசோரம் எல்லைப் பகுதியில் இரு மாநில காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்து. இதில் அசாமைச் சேர்ந்த ஆறு காவலர்கள் மற்றும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த மோதல் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தியாவின் இரு மாநிலங்களிடையே பெரும் மோதல் வெடித்தது பெரும் பேசு பொருளாக மாறி நாட்டின் பாதுகாப்பிற்கே கேள்விக்குறியானது.
கடந்த சில நாள்களாக பதட்ட நிலை குறைந்ததையடுத்து, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா இன்று டெல்லி பயணம் மேற்கொண்டார். காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், எல்லை மோதல் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
அத்துடன் அசாம் மாநிலத்தில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாடு குறித்தும் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எதிர்க்கட்சிகள் ஆதரவு - '127ஆவது சட்டதிருத்த மசோதா' என்றால் என்ன?