மண்டி : இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கோல் அணையில் மோட்டார் படகில் 10 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் படகில் பழது ஏற்பட 10 பேரும் கோல் அணையின் நடுவே சிக்கி கொண்டனர். இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு (NDRF) தகவல் கிடைக்க உடனடியாக 14 மீட்பு படையினருடன் சென்று அணையின் நடுவே சிக்கிய 10 பேர்களையும் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
மோட்டார் படகில் பழுது ஏற்பட கோல் அணையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் 10 பேர்களும் சிக்கி இருந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 14 பேர் கொண்ட குழு ஸ்டீமர் படகில் இரவு 8.30 மணிக்கு தேடுதல் பணியினை தொடங்கி இரவு 12.15 மணிக்கு அணையின் நடுவே சிக்கிய 10 பேர்களையும் கண்டுபிடித்தனர்.
அதன் பின்பு மீட்பு படையை சேர்ந்த வீரர் தனது உயிரை பணையம் வைத்து அணையில் குதித்து நீச்சல் அடித்து பழுதடைந்த படகிற்கு சென்று இரண்டு படகுகளையும் ஓன்று இணைத்து அணையில் சிக்கிய 10 பேர்களையும் பத்திரமாக மீட்டதாக தேசிய போிடர் மீட்பு படையை சேர்ந்த நபர் தொிவித்து உள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் அணையில் சிக்கிய 10 பேர்களை தேடும் பணியில் இரவு 8.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணியளவில் 10 பேர்களையும் பத்திரமாக மீட்டனர். அணையில் சிக்கிய 10 பேர்களில் 5 பேர்கள் வனத்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.