தமிழ்நாடு

tamil nadu

மேகவெடிப்பால் இமாச்சலப் பிரதேசத்தில் மாட்டிய பயணிகள்

By

Published : Jul 30, 2021, 6:59 PM IST

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனிடையே லஹால்- ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள உதய்பூர் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதால் 221 சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டனர்.

மேகவெடிப்பால் ஹிமாச்சலில் மாட்டிக்கொண்ட பயணிகள்
மேகவெடிப்பால் ஹிமாச்சலில் மாட்டிக்கொண்ட பயணிகள்

இதில் 30 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஈடுபட்டுள்ளன. காய்கறி வியாபாரிகளும் தங்களது வாகனங்களுடன் அப்பகுதியில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் ராம்லால் மார்கண்டா, மாவட்ட அலுவலர்கள் மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். லஹால்- ஸ்பிட்டி பகுதியில் மாட்டிக்கொண்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பயணிகள், கனமழை, வெள்ளம் காரணமாக மாட்டிக்கொண்டதாகவும் அரசு உதவ முன்வர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உள்ளூர்வாசிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்துதருவதாகவும் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து லஹால் பகுதியில் மாட்டிக்கொண்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க மாநில அரசிடம் மாவட்ட நிர்வாகம் உதவி கோரியுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் பெண்களும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வானிலையும் சீரற்று இருப்பதால் அப்பகுதியில் ஹெலிகாப்டரை கொண்டு மக்களை மீட்கும் வாய்ப்பும் குறைவாக உள்ளது.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் நீரஜ் குமார் கூறுகையில், லஹால் பகுதியில் மாட்டிக்கொண்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள். அவர்களுக்கு தண்ணீர், உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இமாச்சலில் நிலச்சரிவு: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை

ABOUT THE AUTHOR

...view details