மகா சிவராத்திரியை முன்னிட்டு, இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று, அம்மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் பேசினார். அப்போது, "கரோனா வைரசிலிருந்து நாட்டை பிரமதர் மோடி காப்பாற்றியுள்ளார். உலக நாடுகளுக்கு, தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தையும் அவரால் மட்டுமே சிறப்பாகச் செயல்படுத்த முடிந்தது. தடுப்பூசி விநியோகத்திற்கு பிறகு, சிவபெருமானின் அவதாரமாகப் பிரதமர் மோடி திகழ்கிறார்.
'சிவனின் அவதாரம் பிரதமர் மோடி' - அமைச்சர் புகழாரம் - சிவனின் அவதாரம் பிரதமர் மோடி'
சிம்லா: சிவனின் அவதாரம் பிரதமர் மோடி' என இமாச்சல பிரதேச அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுரேஷ் பரத்வாஜ்
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலில் உள்ள குகையில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தார். அப்போது, அவருக்குச் சிவனின் ஆசீர்வாதம் கிடைத்தது. அவரின் அருளால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' - துணை நிலை ஆளுநர் தமிழிசை!