தர்மசாலா (ஹிமாச்சலப் பிரதேசம்):ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டம், ஷாபூரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகாஜன். இவர் தனது மனைவி பூஜாவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதன்படி நிலவில் இடம் வாங்கி பரிசளிக்கலாம் என முடிவு செய்துள்ளார்.
இதற்காக, முறைப்படி நியூயார்க்கில் உள்ள சர்வதேச லூனார் லேண்ட்ஸ் சொசைட்டியில் (International Lunar Lands Society of New York) விண்ணப்பித்தார். ஓராண்டுகாலம் நடைமுறைகள் மேற்கொண்ட பின், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஹரிஷ் கூறுகையில், "என் மனைவி மீது கொண்ட அன்பில் இதை செய்தேன். பணத்தைப் பற்றியது அல்ல" என்றார். மேலும், நிலம் வாங்க செலுத்தப்பட்ட தொகை குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.