தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 நாள்களுக்கு முன்பு கோவிட் தடுப்பூசி; மர்மமாக இறந்து கிடந்த பாஜக எம்பி! - தடுப்பூசி

பாஜக எம்பி ராம் ஸ்வரூப் சர்மா மர்மமான முறையில் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் மூன்று நாள்களுக்கு முன்பு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் ஆவார்.

Himachal BJP MP, Ram Swaroop Sharma found dead Ram Swaroop Sharma found dead ராம் ஸ்வரூப் சர்மா மரணம் கோவிட் தடுப்பூசி பாஜக
Himachal BJP MP, Ram Swaroop Sharma found dead Ram Swaroop Sharma found dead ராம் ஸ்வரூப் சர்மா மரணம் கோவிட் தடுப்பூசி பாஜக

By

Published : Mar 17, 2021, 12:23 PM IST

மணாலி: பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம் ஸ்வரூப் சர்மா. 62 வயதான இவர் இன்று (மார்ச் 17) அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அஷ்ரே சர்மாவை (32) தோற்கடித்தார். நாடாளுமன்றத்தில் சர்மா மென்மையான குரலில் பேசக் கூடியவர்.

இந்நிலையில், இவர் மூன்று நாள்களுக்கு முன்பு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதற்கான தடயங்களும் வீட்டில் கிடைத்துள்ளன. மூன்று நாள்களுக்கு முன்பு அவருக்கு கோவிட் -19 தடுப்பூசி போட்ட முதல் டோஸ் கிடைத்தது. சர்மா மரணத்தையடுத்து பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: டெலிபோன்கள் ஒட்டுக்கேட்பு, ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன்- அசோக் கெலாட்!

ABOUT THE AUTHOR

...view details