தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இமாச்சலப்பிரதேசத்தில் தவிடு பொடியான பிரதமர் மோடியின் யுக்தி - Himachal pradesh election result 2022

பிரதமர் மோடி நான்கு முறையும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 நாட்கள் முகாமிட்டும் இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவி இருப்பது அக்கட்சி உறுபினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Dec 8, 2022, 4:41 PM IST

சிம்லா: 68 இடங்களைக் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 39 இடங்களைக் கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி 4 முறை இமாச்சலப்பிரதேசத்தில் பிரசாரம் செய்தார். மேலும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 நாட்கள் முகாமிட்டு 15 இடங்களில் சூறாவளி பிராசாரம் மேற்கொண்டபோதும் பா.ஜ.க வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் தோல்வியைத் தழுவினர்.

அதேநேரம் காங்கிரஸ் தரப்பில் பெரிய அளவிலான மேடை பிரசாரங்கள், மேலிடத் தலைவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளாத போதும் அக்கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க:"மவுன பிரசாரம்" - காங்கிரஸ் தோல்விக்கு காரணமா?

ABOUT THE AUTHOR

...view details