குல்லு: ஹிமாச்சல பிரதேசத்தில் வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளை அமைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குல்லு மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாமல், அணுகுவதற்கு கடினமாக உள்ள மூன்று வாக்குச் சாவடிகளை சென்றடைய அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
பஞ்சார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி, டார்ஷன் ஆகிய இரண்டு இடங்களில் 98 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக வாக்கு மையம் அமைக்கப்படவுள்ளது. வாக்குச்சாவடிகளை அமைக்க, தேர்தல் ஊழியர்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியில் சாலை வசதியும், இணைய வசதியும் கூட இல்லை என கூறப்படுகிறது. அதேபோல் மணிகர்ணா பள்ளத்தாக்கில் உள்ள ரஷோல் வாக்குச் சாவடியும் அணுக முடியாத பகுதியில் அமைந்துள்ளது.