சிம்லா (இமாச்சல பிரதேசம்):கனமழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 130 நாட்களில் 432 பேர் இறந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 18 வீடுகள் சேதமடைந்துள்ளது. 123 சாலைகள் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது.
ஜூன் 13, 2021 முதல் விவசாயம், தோட்டக்கலைக்கு ரூ .745 கோடி உள்பட அரசுக்கு மொத்தம் ரூ. 1,108 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த 130 நாட்களில் 12 பேரை காணவில்லை என்றும் 857 வீடுகள், 700 மாட்டு கொட்டகைகள் சேதமடைந்துள்ளன எனவும் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கைக்குழந்தையை கொலை செய்த தந்தை தற்கொலை!