தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிஜாப் விவகாரம்: காவிக்கொடி ஏற்றிய மாணவனால் பரபரப்பு! - காவி கொடி ஏற்றிய மாணவரால் பரபரப்பு

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் கொடிக்கம்பத்தில் மாணவர் ஒருவர் காவிக்கொடியை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hijab-suffron-issue-student-hoists-saffron-flag-in-shivamogga
hijab-suffron-issue-student-hoists-saffron-flag-in-shivamogga

By

Published : Feb 9, 2022, 10:51 AM IST

பெங்களூரு: கர்நாடக அரசின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளுக்கு அனுமதியில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்டவை அணிந்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உடுப்பியில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் உரிமை என்றால் காவித்துண்டு அணிவது தங்கள் உரிமை எனக்கூறி இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்துவந்தனர்.

சிக்மங்களூருவிலும் ஒரு பள்ளியில் இதே போன்று போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம், கல்லூரிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வாயிற்கதவை மூடும் காணொலிக் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நேற்று சிவமொக்காவில் உள்ள அரசுக் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் கொடிக்கம்பத்தில் ஏறி காவிக்கொடியை ஏற்றினார். அப்போது கீழே இருந்த மற்ற மாணவர்கள் காவித்துண்டை கையில் வைத்துக்கொண்டு ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர்.

காவிக்கொடி ஏற்றிய மாணவன்

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ட்வீட் செய்துள்ளார். அதில், ”கர்நாடகவில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் நிலைமை கை மீறி போய்விட்டது. தேசியக் கொடிக்குப் பதிலாக தற்போது காவிக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பாதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை ஒரு வாரம் மூட வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details