டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களை குறிக்கும் உடைகளை அணிய தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தது.
ஹிஜாப் விவகாரம்... மேல்முறையீட்டு மனுக்கள் மீது கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு... - கர்நாடக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது கர்நாடக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hijab
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று(ஆக.29) நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ஹிஜாப் தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு