கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வகுப்பு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை மூன்று நீதிபதி கொண்ட உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்கக் கோரி மனு தாரர் தொடர்ந்திருந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா விசாரித்துவந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தன்னுடன் சேர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரீது ராஜ் அஸ்வதி, நீதிபதி ஜெயபுனிசா காசி ஆகியோர் கொண்ட மூன்று பேர் அமர்வுக்கு மாற்றியுள்ளார்.
இந்த அமர்வு நாளை மாலை 2.30 மணி அளவில் வழக்கை விசாரிக்கிறது. முன்னதாக, ஹிஜாப் அணிவது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட போராட்டம் அம்மாநிலத்தில் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக ஞாயிறு வரை அங்குள்ள கல்வி நிலையங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது.
இதையும் படிங்க:மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்யும் - ஆளுநர் தமிழிசை