தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - உச்ச நீதிமன்றம் - ஹிஜாப் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்

கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

hijab
hijab

By

Published : Jan 23, 2023, 1:04 PM IST

டெல்லி: கர்நாடகாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்குகளில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. கர்நாடக அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் என்று ஒரு நீதிபதியும், கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்து ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால், கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு இந்த வழக்குகள் மாற்றப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details