சென்னை - பெங்களூரு இடையே அதிவிரைவு சாலை திட்டம் 14 கோடியே 872 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு 6 - 7 மணி நேரம் வரை ஆகும் நிலையில் , 262 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இச்சாலை திட்டத்தினால் பயண நேரம் 2இல் இருந்து 3 மணி நேரம் வரை குறையும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் படியாக இச்சாலை திட்டம் அமைக்கப்பட இருக்கிறது. அதாவது, கர்நாடகாவின் வழியே 71 கிலோ மீட்டரும், ஆந்திரப்பிரதேசம் வழியே 85 கிலோ மீட்டரும் மற்றும் தமிழ்நாட்டின் வழியே 106 கிலோ மீட்டரும் சாலை அமைக்கப்பட இருக்கிறது.