இந்தியாவில் கோவிட்-19 நிலவரம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அவர், "இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலை ஏற்பட்டு அது குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் என பலரும் கூறுகின்றனர். ஆனால், இது ஆதாரமற்ற தகவல் என பெரும்பாலான குழந்தைகள் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும், கறுப்பு பூஞ்சை நோய் எனப்படும் மியூக்கோர்மைகோஸிஸ் பாதிப்புக்கு மக்கள், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். சிறந்த சுகாதாரம், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியே கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கு நல்ல கவசமாகும்.