லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கிராமத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற பிரியங்கா காந்தி, ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச அரசு இன்று (அக். 6) அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோருடன் லக்கிம்பூர் செல்வதற்காக லக்னோ விமான நிலையம் சென்றார்.
பூபேஷ் பாகல், சரண்ஜித் சிங் சன்னி உடன் ராகுல் காந்தி ராகுல் தர்ணா
அங்கிருந்து லக்கிம்பூருக்கு தங்களது வாகனங்களில் அவர்கள் புறப்பட திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் வரும்படி கூறியுள்ளனர்.
களமிறங்கிய ராகுல் காந்தி... ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ராகுல் காந்தியும், பிற தலைவர்களும் விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காவல் துறையினர் எதையோ திட்டமிடுவதாகவும், உத்தரப் பிரேதச அரசு தற்போது எந்த வகையில் எனக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளது என்பதே புரியவில்லை என்றும் கூறினார்.
பிரியங்காவை சந்திக்கும் ராகுல்
இதையடுத்து, காவலர்கள் அனுமதி அளித்த பின்னர், ராகுல் காந்தியும், காங்கிரஸ் குழுவினரும் விமான நிலையத்தில் இருந்து தங்களின் வாகனத்தில் புறப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் சீதாப்பூரில் உள்ள பிரியங்கா காந்தியை அழைத்துக்கொண்டு லக்கிம்பூர் செல்ல உள்ளனர்.
கே.சி. வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா உடன் ராகுல் காந்தி முன்னதாக, லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த நான்கு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சீதாப்பூரில் காவல் துறையினர் கைதுசெய்து வீட்டுச்சிறையில் அடைத்திருந்தனர். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவுடன் அமித் ஷா சந்திப்பு