தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் கேள்வி - புதுச்சேரி பாஜக

புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்களைப் பெற்று பாஜகவினர் பரப்புரைச் செய்ததாகத் தொடர்ந்த வழக்கில், விசாரணை முடியும்வரை தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி, Puducherry, புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது உயர் நீதிமன்றம் கேள்வி, high court investigation about puducherry bjp collected voters phone number, புதுச்சேரி பாஜக, puducherry bjp collected voters phone number
high-court-investigation-about-puducherry-bjp-collected-voters-phone-number

By

Published : Mar 26, 2021, 7:10 PM IST

Updated : Mar 26, 2021, 8:02 PM IST

புதுச்சேரி: பாஜக சார்பில் தொகுதிவாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து தேர்தல் பரப்புரைச் செய்யப்பட்டுவருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால், ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் செல்போன் எண்களைப் பெற்று பாஜக பரப்புரையில் ஈடுபட்டுவருவது குறித்து சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 26) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்காளர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்புரைசெய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதி பெறாமல் மொபைல் செய்தி அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பாஜகவிற்கு மார்ச் 7ஆம் தேதி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 8ஆம் தேதி விண்ணப்பித்தாக பாஜக தரப்பில் கூறுவதுபோல எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சைபர் கிரைம் விசாரித்துவருவதாகவும், அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையமும், தேர்தல் ஆணையமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்த விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:'திமுக ஆட்சியில்தான் ஊழல் என்ற குழந்தை பிறந்தது’

Last Updated : Mar 26, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details