ஜம்மு-காஷ்மீர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த மறைவிடத்தைக் காவல்துறையினர் அழித்தனர். அந்த மறைவிடத்தில் மிகவும் ஆபத்தான வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல் துறை அளித்த தகவலின்படி, ஷோபியான் மாவட்டத்தின் குட்போரா பகுதியை இரவு நேரத்தில் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் இருந்த மறைவிடம் அழிக்கப்பட்டது.