தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேஷனல் ஹெரால்டு வழக்கு - யங் இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை! - மல்லிகார்ஜுன கார்கே ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்குத்தொடர்பாக, யங் இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் மீண்டும் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.

ED
ED

By

Published : Aug 4, 2022, 5:36 PM IST

டெல்லி: நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்குத்தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2ஆம் தேதி, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் உள்ள யங் இந்தியா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று(ஆகஸ்ட் 3) யங் இந்தியா அலுவலகத்துக்குச்சீல் வைத்தனர். நிதி முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் யங் இந்தியா நிறுவனத்தில் இருப்பதாகவும், அவற்றைக் கைப்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள் யாரும் இல்லாததால், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில் சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்று நோட்டீசும் ஒட்டினர்.

இந்த வழக்குத்தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி யங் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அலுவலரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் முன்பு மல்லிகார்ஜுன கார்கே ஆஜரானார். இதையடுத்து, யங் இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனையைத்தொடங்கினர்.

இதையும் படிங்க:"நரேந்திர மோடியைக் கண்டு பயப்படவில்லை" - ராகுல்காந்தி!


ABOUT THE AUTHOR

...view details