புதுச்சேரி மாநிலத்தில் 73 வகை போக்குவரத்து விதிகளுக்கு அபராதத் தொகையை அதிகரித்து, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம், மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதிநீக்கம், இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைக்கவசம் உயிர்க்கவசம்
அதன்படி, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் போக்குவரத்துக் காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சூழலில், கரோனா பரவல் காரணமாக அபராத அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.