அமராவதி:வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திராவிலும் மழை வெளுத்து வாங்கிவருகிறது. கனமழையால் திருப்பதி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மலை நடைப்பாதைக்குச் செல்லும் வழியிலிருந்து மழை நீர் அருவிபோல் வெளியேறுகிறது. இதனால் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
மேலும் சாலைப் போக்குவரத்தில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக அங்குள்ள மலைப்பாதைகளில் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் திருப்பதி ஏழுமலையான் (Tirupati Temple) கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவு போல் மாறிய திருப்பதி கனமழையால் திருப்பதி முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆர்ஜித அலுவலகத்தில் மழைநீர் (Heavy Rain) புகுந்ததால் அங்குள்ள கணினி சர்வர்கள் முடங்கின. இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Heavy Rain: குளம் போல் காட்சியளிக்கும் பள்ளி