டெல்லியில், நேற்று(ஆக.31) அதிகாலை முதலே கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முக்கிய நகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த நான்கு நாள்களுக்கு, டெல்லியின் லோதி சாலை, இந்திரா காந்தி, குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், நொய்டா, இந்திராபுரம், லோனி தேஹத், ஹிண்டன், காஜியாபாத் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.