தென்மேற்குப் பருவமழை காரணமாக, வரும் 26ஆம் தேதிவரை கர்நாடகாவில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. மாநிலத்தில் கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 23) ரெட் அலர்ட்டும், ஜூலை 24 முதல் 26ஆம் தேதிவரை மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகவே, கர்நாடகாவில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், பல ஆறுகளும், ஏரிகளும் நிறைவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடர் உருவாகியுள்ளது.
குறிப்பாக கர்வார், சிர்ஸி, மைசூரு, தர்வாட், பெல்காவி, பாகல்கோட், விஜயபுரா பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளப்பெருக்கு இடர் ஏற்பட்டுள்ளது.