தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூரு- கனமழைக்கு இருவர் உயிழப்பு - போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் கடந்த செவ்வாய் கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்நிலையில் கனமழைக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார்.

பெங்களூருவில் இடியுடன் கூடிய பலத்த மழை
பெங்களூருவில் இடியுடன் கூடிய பலத்த மழை

By

Published : May 18, 2022, 2:17 PM IST

Updated : May 19, 2022, 9:09 AM IST

பெங்களூரு: பெங்களூருவில் செவ்வாய் கிழமை (மே17) இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இதனால் மந்திரி மால் ஸ்டேஷனில் உள்ள பசுமை வழித்தடத்தில் மெட்ரோ சேவைகள் மீண்டும் தொடங்க இருந்த நிலையில் பலத்த மழையால் நிறுத்தப்பட்டது.

ஜே.பி.நகர், ஜெயநகர், லால்பாக், சிக்பெட், மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யஷ்வந்த்பூர், எம்.ஜி.சாலை, கப்பன் பார்க், விஜயநகர், ராஜராஜேஸ்வரி நகர், கெங்கேரி, மாகடி சாலை, மைசூர் சாலை உள்ளிட்ட பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன.

இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அகில இந்திய வானிலை அறிவிக்கையின் படி, தென்மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு முன்னேறுவதால், கடலோர மற்றும் தெற்கு கர்நாடகாவில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியது.

பெங்களூரு- கனமழைக்கு இருவர் உயிழப்பு

ரூ.5 லட்சம் நிவாரணம்:இந்த நிலையில் கனமழைக்கு பெங்களூருவில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார். இதனிடையே கன மழை காரணமாக கர்நாடகாவில் மைசூரு மற்றும் உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த இடங்களில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!

Last Updated : May 19, 2022, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details