தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"33 வருடங்களுக்குப் பிறகு வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் பணியாற்றுவதில் இதயம் துள்ளுகிறது" - ரஜினிகாந்த்! - டி ஜே ஞானவேல் ராஜா

Rajinikanth "x" post: 33 ஆண்டுகளுக்கு பிறகு தனது வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் இணைந்து பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது x பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Rajinikanth
ரஜினிகாந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 1:57 PM IST

ஹைதராபாத்: தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனது "x" தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "33 வருடங்களுக்குப் பிறகு எனது ஆலோசகர், வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். டி.ஜே. ஞானவேல் ராஜா இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் “தலைவர் 170” படத்தில் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதைக் கண்டு என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது" என்று நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டு உள்ளார்.

டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் "தலைவர் 170". இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். படத்தில் இணைந்து உள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பினை கடந்த 3ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி படத்தின் பூஜை படங்களை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கப்போவதாக படக்குழு அறிவித்தது. மேலும், படத்தின் முதற்கட்ட காட்சிகள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலும், திருநெல்வேலியில் சில சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:ஆசிய பாரா விளையாட்டு : சாதனைகளை வாரிக்குவிக்கும் இந்திய வீரர் சுமித் அண்டில்!

ABOUT THE AUTHOR

...view details