வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்தவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான விசாரணை மே 20ஆம் தேதி நடந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை வாரணாசி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.