தமிழ்நாடு

tamil nadu

பகிர் கிளப்பும் 'புதிய அறிகுறிகள்'... தொடரும் கரோனா கோரத்தாண்டவம்

காதுகேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வறட்சி போன்றவை கரோனா தொற்றின் புதிய அறிகுறிகள் என மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By

Published : Sep 6, 2021, 6:18 PM IST

Published : Sep 6, 2021, 6:18 PM IST

ETV Bharat / bharat

பகிர் கிளப்பும் 'புதிய அறிகுறிகள்'... தொடரும் கரோனா கோரத்தாண்டவம்

covid 19
கரோனா

சீனாவில் 2019ஆம் ஆண்டு முதன்முதலாகப் பரவ தொடங்கிய கரோனா தொற்று பரவல், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்தக் கரோனா தொற்றால்இந்தியாவில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனால்,கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேலும் சில அறிகுறிகள் இருந்தால் கரோனா தொற்றாக இருக்கலாம் என்று கோவிட்-19 டாஸ்க் ஃபோர்ஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய அறிகுறிகள் என்ன?

முன்னதாக கரோனாவின் பிரதான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வறட்சி, மூச்சுத் திணறல் ஆகியவை இருந்துவந்தது. இதனிடையே தற்போது காதுகேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வறட்சி, எச்சில் ஊறுதல் குறைவு, அரிப்பு உள்ளிட்ட சருமக்கோளாறு போன்றவை இருந்தாலும் கரோனாவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும். அத்துடன் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நிபா வைரஸ் உருவான இடத்தை தேடும் பணியில் சுகாதாரத் துறை

ABOUT THE AUTHOR

...view details