அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் மோடி (99), நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி, குஜராத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் வந்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் மருத்துவமனையில் இருந்த தாயாருடன் பிரதமர் மோடி உடன் இருந்தார்.
பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலையில் முன்னேற்றம்! - Heeraben Modi health condition
பிரதமர் மோடியின் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குஜராத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலையில் முன்னேற்றம்!
இந்த நிலையில் ஹீராபென் மோடியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குஜராத் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது ஹீராபென் மோடிக்கு வாய் வழியாக உணவு வழங்கப்படுவதாகவும், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Heeraben Modi: தாயார் ஹீராபெனுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனை விரைந்த பிரதமர் மோடி!