தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹோலி பண்டிகையால் உண்டாகும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் - ஹோலியினால் உண்டாகும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்

இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் ஹோலிப்பண்டிகை மிக முக்கியமானது. இவ்விழாவின் போது பொதுமக்கள் பல நிற வண்ணப் பொடிகளை பூசி, தண்டாய் பானம் பருகி நடனம் ஆடி அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

ஹோலியினால் உண்டாகும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்
ஹோலியினால் உண்டாகும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்

By

Published : Mar 18, 2022, 10:16 PM IST

ஹோலி என்ற வார்த்தையை கேட்டவுடன் பெரும்பாலான மக்களின் முகத்தில் ஓர் இனம் புரியா புன்னகை வந்துவிடுகிறது. முக்கியமாக, வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி, கடந்த சில காலங்களாகத் தென் இந்தியப் பகுதிகளிலும் பரவி வருகிறது. வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்வதும், இனிப்புகளைப் பகிர்வதும்தான் இந்த பண்டிகையின் கொண்டாட்ட முறைகள்.

மேலும் தண்டாய் பானம் பருகி நடனம் ஆடி களிப்பை வெளிப்படுத்துவர். இந்த ஹோலியினால் உண்டாகும் நன்மைகள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி பின்வருமாறு

பொதுவாக ஹோலியின் போது குலால் எனப்படும் இயற்கை நிறமிகளால் தயாரிக்கப்பட்ட வண்ணப் பொடிகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது பல கெமிக்கல் கலக்கப்பட்ட பொடிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்த வகையான பொடிகள் சருமத்தில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மகிழ்ச்சியின் உணர்ச்சிகள்

ஹோலி இரண்டு நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் 'ஹோலிகா தகான்' என்றழைக்கப்படுகிறது. அதன் மறுநாள் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வண்ணம் பூசி விளையாடுவர். இந்த விழா குறித்து மனநல மருத்துவர் டாக்டர். ரேனுகா கூறுகையில்:

"நம் நாட்டில் எந்த பண்டிகையானாலும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுகிறது. ஹோலி குறித்துக் கூற வேண்டுமானால் குலால் வண்ணப்பூச்சுகளின் நறுமணமும், சுவையான இனிப்புகள் குறித்துதான் பேச வேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் நமது உணர்வுகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நம் அருகாமையில் உள்ளவர்களிடம் நேரத்தைக் குதூகலமாகக் செலவிடுகிறோம். இது நேரடியாக நமது மன அழுத்தங்களைக் குறைக்கிறது" என்றார்.

எண்ணமெல்லாம் வண்ணமம்மா...

பெங்களூரைவைச் சேர்ந்த வண்ணவியல் நிபுணர் கீர்த்தி, வண்ணங்களின் உண்மையான தாக்கத்தைப் குறித்து விரிவாகக் கூறுவதாவது, "நாம் ஹோலி விளையாடும் வண்ணங்கள் நம் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறங்கள் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.

உதாரணமாக, சிவப்பு நிறம் நமது இதயத்துடிப்பைச் சீராக்கவும், சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதேபோல், மஞ்சள் மற்றும் நீல நிறங்கள் நம் மனதில் அமைதியான விளைவை ஏற்படுத்துகின்றன. மேலும், அவை நம்மை மகிழ்ச்சியாக உணரவைக்கும்" என்றார்.

சுற்றுச்சூழலில் பாஸிட்டிவான விளைவுகள்

ஆயுர்வேத மருத்துவர் ராஜேஷ், கோடைக்காலத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழலை பாதிப்புகளை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குகிறார். கோடைக்காலத்தில் மாசுபாடுகளை அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தனிமங்கள் சுற்றுச்சூழலில் பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இது நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பலர் ஹோலிகாவிற்கு பசுவின் சாணம் மற்றும் நெய்யைப் பயன்படுத்துகிறார்கள். இதன் புகை, இந்த பாக்டீரியா மற்றும் சுற்றுச்சூழலிலிருந்து மாசுகளை அகற்ற உதவுகிறது.

மக்கள் செம்பருத்திப் பூக்கள், மருதாணி இலைகள், சந்தனப் பொடி மற்றும் மஞ்சள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட இயற்கையான வண்ணங்கள் அல்லது குலாலைக் கொண்டு ஹோலி விளையாடுவார்கள். தோல் மட்டுமல்லாமல், இந்த பொருட்கள் நம் முடி மற்றும் கண்களுக்கும் நன்மை பயக்கும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், ரசாயனங்கள் நிறைந்த, செயற்கை வண்ணங்கள் சந்தையில் விற்கப்படுவதால், பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுகிறது. எனவே, வண்ணங்களை வாங்கும் போதும், விளையாடும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கரோனா தொற்று வெகுவாகக் குறைந்திருந்தாலும், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. எனவே, விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது முன்னெச்சரிக்கை அவசியம். குறிப்பாக, கூட்டம் அதிகமாக இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரித்தார்.

இதையும் படிங்க:வாரணாசியில் ஹோலி கொண்டாடிய ரஷ்ய அதிபர்?

ABOUT THE AUTHOR

...view details