ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காந்த ரெட்டி நகரில் அமைந்துள்ளது ஹீல் பள்ளி (Heal school). பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட தனியார் அறக்கட்டளை மூலம் 1992ம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. ஏழை எளிய குழந்தைகள், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. கண் பார்வையற்ற, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான தரமான கல்வியுடன் உணவும் வழங்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை: இந்த நிலையில் 2023-24ம் கல்வியாண்டுக்கான 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 3-5ம் வகுப்பு வரை குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தாய் தந்தையை இழந்த குழந்தைகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கப்படுவார்கள் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்களை info@healparadise.org, healschool@healparadise.org என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?: குடும்பத்தால் கவனிக்கப்படாத 18 வயதுக்கு உட்பட்டோர், தாய், தந்தையை இழந்தவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்ட குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் இப்பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.