டெல்லி: தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா டிசம்பர் 8ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து, எஸ்டேட் இயக்குநரகத்தின் சார்பில் அரசு பங்களாவை காலி செய்யக் கோரி மஹுவா மொய்த்ராவிற்கு டிசம்பர் 11ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி ஜனவரி 7ஆம் தேதி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மஹுவா மொய்த்ரா டெல்லி நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்தார். அதில், "எஸ்டேட் இயக்குநரகத்தின் சார்பில் அரசு பங்களாவை காலி செய்யக் கோரி டிசம்பர் 11ஆம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் அல்லது 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசு பங்களாவில் தங்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.