ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா தே என்ற பெண், தான் திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை தேடுவதாக விளம்பர பலகை வைத்துள்ளார்.
அதில், "மாப்பிள்ளையின் வயது 30 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நன்றாக படித்தவராக, குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை, பொறுப்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.