தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2021, 10:26 AM IST

ETV Bharat / bharat

விஷம் வைத்து கொல்லப்பட்ட 38 குரங்குகள்: காரணம் இதுதான்!

பெங்களூருவில் உள்ள சௌதநஹல்லி கிராமத்தில் விஷம் வைத்து 38 குரங்குகள் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

Hassan monkeys death case: death reason revealed
Hassan monkeys death case: death reason revealed

பெங்களூரு: ஹாசன் மாவட்டம் சௌதநஹல்லி கிராமத்தில் ஜூலை 28ஆம் தேதி அன்று 38 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தகவலின்படி, குரங்குகளுக்கு விஷம் கொடுத்து அடித்துக்கொன்றது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, குரங்குகளை சாக்கு மூட்டையில் கட்டி சக்லேஷ்பூர் பெகுர் கிராஸ் சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத் துறை அலுவலர்கள் ஆகியோர் குரங்குகள் இறப்பு குறித்து மூன்று நாள்களுக்குள் அறிக்கைத் தாக்கல்செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.

இதையடுத்து அலுவலர்கள் அந்தக் கிராமத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பயிர்களைச் சேதப்படுத்தியதால் குரங்குகளுக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: 30 குரங்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரர்கள்

ABOUT THE AUTHOR

...view details