டெல்லி: ஹரியானாவில் இயற்றப்பட்டுள்ள தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு சட்டம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனியார் வேலைவாய்ப்பில் 75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டத்தால் குர்ஹாமில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குர்ஹாமில் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் தொழில்கள் காரணமாக, இந்தப் பகுதி மாநிலத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நகராகவும் விளங்கிவருகிறது.