தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானா பாஜக அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு! - பாஜக அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பெண் பயிற்சியாளரின் புகாரின் பேரில், ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Haryana
Haryana

By

Published : Jan 1, 2023, 2:11 PM IST

சண்டிகர்: ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங்(36). ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரரான இவர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய தடகள வீராங்கனையும், தடகள பயிற்சியாளருமான பெண்மணி ஒருவர் சந்தீப் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறினார். பணி நிமித்தமாக அமைச்சர் சந்தீப் சிங்கை சந்திக்க, சண்டிகரில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்றபோது, அவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், அரசியல் நோக்கத்திற்காகவே இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தீப் சிங் விளக்கமளித்தார்.

இந்த நிலையில், பெண் பயிற்சியாளர் அளித்த புகாரில் பேரில், சண்டிகரில் உள்ள காவல் நிலையத்தில் பாஜக அமைச்சர் சந்தீப் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details