தாத்ரி: ஹரியானா மாநிலம் தாத்ரி அருகே உள்ள அடேலா கலன் கிராமத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் கல்லுராம், பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக, தனது வீட்டின் அருகே உள்ள மலையில் குளம் ஒன்றை வெட்டிப் பராமரித்து வருகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, மலையின் நடுவே 50 மீட்டர் ஆழத்தில் குளம் வெட்டியுள்ளார். அந்த குளத்தில் தண்ணீரை சேமித்து, அதை பறவைகள் மற்றும் விலங்குகள் சிரமமின்றி குடிக்கவும் வழி செய்துள்ளார். இதில் தினந்தோறும் ஏராளமான பறவைகள் வந்து நீர் அருந்திச்செல்கின்றன.
இதுகுறித்து கல்லுராம் கூறுகையில், "என் இளம் வயதில் ஆடு, மாடு மேய்க்க மலைப்பகுதிகளுக்குச்செல்லும்போது, தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் மற்றும் பறவைகள் உயிரிழப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால், பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக குளம் ஒன்றை வெட்ட வேண்டும் என நினைத்தேன்.