தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Viral Video: ’மாட்டுச் சாணம் சாப்பிடுங்க; கோமியம் குடிங்க!’ - மருத்துவர் வெளியிட்ட காணொலி - மாட்டு சாணம் சாப்பிட்ட டாக்டர்

ஹரியானாவில் மருத்துவர் ஒருவர் மாட்டுச் சாணத்தைச் சாப்பிட்டும், மாட்டு கோமியத்தை குடிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

haryana-doctor-eat-cow-dung
haryana-doctor-eat-cow-dung

By

Published : Nov 20, 2021, 12:26 PM IST

ஹரியானாவில் கர்னல் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் மனோஜ் மிட்டல் எனபவர் மாட்டுச் சாணத்தைச் சாப்பிட்டும், மாட்டு கோமியத்தை குடிக்கும் காணொலி (Viral Video) சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்தக் காணொலியில், அவர் தரையில் இருந்த மாட்டுச் சாணத்தை எடுத்து ருசித்துச் சாப்பிடுகிறார். அதன் பின்பு அதன் பலன்களைச் சொல்கிறார். தொடர்ந்து, மாட்டு கோமியத்தை குடித்தால் என்னென்ன வியாதிகள் தீரும் எனவும் பட்டியலிடுகிறார்.

மேலும் அவர் பெண்கள் சுகப்பிரசவம் பெற மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் குடிக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்தால் கட்டாயம் அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பஞ்சகவ்வியத்தின் ஒவ்வொரு பொருளும் மிக உயர்வானது, மாட்டுச் சாணத்தைச் சாப்பிட்டால் நம் உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமாகும் எனக் கூறினார்.

இதையும் படிங்க : Air Force Rescue: ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை

ABOUT THE AUTHOR

...view details