ஹிசார்: நாடு முழுவதும் பருவகால குளிர் கடுமையாக நிலவி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனிடையே ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் செளதாலா, நேற்று (டிச.19) ஹிசாரில் இருந்து சிர்சாவுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
ஹரியானா துணை முதலமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியது - fog in delhi
ஹரியானா துணை முதலமைச்சர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது பாதுகாப்பு அலுவலர்கள் காயமடைந்துள்ளனர்.
அதிக பனிமூட்டம் காரணமாக சாலை சரியாக தெரியாததால், காரின் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக்கை போட்டுள்ளார். அப்போது துணை முதலமைச்சரின் காருக்கு பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து கான்வாயில் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் துணை முதலமைச்சர் செளதாலா பாதுகாப்பாக மீட்கப்பட்டார். ஆனால் அவருடன் வந்த பாதுகாப்பு அலுவலர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது ராணுவ வீரர்களை விமர்சிக்கக் கூடாது: ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி