தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார நிகழ்ச்சி: மத்திய அமைச்சர் பங்கேற்பு

டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், நேற்று நடைபெற்ற தேசிய பிறந்த குழந்தைகள் பாதுகாப்பு வார நிகழ்வில் கலந்துகொண்டார்.

Harsh Vardhan
Harsh Vardhan

By

Published : Nov 21, 2020, 4:20 PM IST

அப்போது அவர் பேசுகையில், “பிறந்த குழந்தை ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்திற்கு சுகாதாரத் துறை முன்னுரிமை அளிக்கிறது. இதனை உயர்தர மட்டத்தில் மீண்டும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், “புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் மற்றும் பிரசவ விகிதத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை அடைவதில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு மற்றும் இறப்புகளைத் தடுப்பதற்கான புதிதான செயல்திட்டம் இந்தியாவில்தான் முதன்முதலாக 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரசவத்தின்போது தாய் இறத்தல் அல்லது கர்ப்பம் தொடர்பான அனைத்து இறப்புகளையும், தவிர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு சுராக்ஷித் மத்ரித்வா ஆஷ்வாசன் (சுமன்) திட்டம் போன்ற முயற்சிகள் சான்றாகும்.

எங்கள் நடைமுறைகளையும், செயல்திறனையும் மேம்படுத்த நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 'அனைவருக்கும் ஆரோக்கியத்தை' உறுதிசெய்வதில் இன்னும் ஆர்வமாக உள்ளது. உலகளாவிய இலக்குகளைவிட ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்டிஜி) அடைவதற்கும், 2022-க்குள் ஆரோக்கியமான புதிய இந்தியாவை நிறுவுவதற்கும் நாங்கள் முயற்சி செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தரம், சமத்துவம், கண்ணியம் இவையே இந்த ஆண்டிற்கான தேசிய பிறந்த குழந்தை வாரத்தின் கருப்பொருள் ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details