ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் (Haridwar hate speech) நடந்த மதம் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜிதேந்திர நாராயண் தியாகி என்ற வாசிம் ரிக்வி, இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.
இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153-A (இரு தரப்பினர் இடையே மத ரீதியிலான பிளவை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிணை கோரி வாசிம் ரிக்வி தாக்கல் செய்த மனு, ஹரித்வார் தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் முகேஷ் சந்திர ஆர்யா, வாசிம் ரிக்விக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.