ஹைதராபாத்: நேற்று நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2023 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஆறு சிக்ஸர்கள் அடித்தன. இந்த விளையாட்டு போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் ரசிகர்கள் மறக்க முடியாதவையாக மாறி உள்ளன. முதலில் ஹர்திக் பாண்டியா அடித்த ஸ்பாய்லர் சிக்ஸ், இரண்டாவதாக, கே.எல்.ராகுல் அடித்த வின்னிங் ஹாட் சிக்ஸ்.
விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பாட்னர்ஷிப் இந்திய அணிக்கு தேவையான ரன்களை குவித்தது. இருவரும் சதத்தை நோக்கி விளையாடி கொண்டிருக்கும் வேளையில், விராட் கோலி 85 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். விராட் கோலி ஆட்டமிழக்கையில் ராகுல் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவரின் சதத்திற்கு தேவையாக இருந்ததோ 25 ரன்கள். அதே சமயம் இந்திய அணி வெற்றி பெற 32 ரன்கள் தேவையாக இருந்தது.
கோலி பெவிலியன் திரும்பிய பிறகு களம் வந்த ஹர்திக் பாண்டியா 4 ரன்கள் எடுத்து இருந்த போது 39.5 ஒவர் பந்தில் சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸை அவர் அடிக்காமல் கே.எல்.ராகுலுக்கு வழி விட்டு இருந்தால் அவர் சதம் அடித்து இருபார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.