ஹைதராபாத்:ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்.30) புனேவில் உள்ள எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிராக ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இணைந்து நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 49 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45 புள்ளி 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அஸ்மத் ஓமர்சல் 63 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ஹஸ்மத் 74 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். இந்த இருவரின் ஆட்டமும் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. மேலும் ரஹ்மத் 74 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணணைப் பேச்சாளராக இருந்த ஹர்பஜன்சிங் உடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் உலகக் கோப்பை போட்டியில் மூன்றாவது வெற்றியை நடனமாடி கோலாகமாகக் கொண்டாடினர். இந்த வீடியோவை இர்பான் பதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:PAK VS BAN: டாஸ் வென்று வங்கதேசம் பேட்டிங் தேர்வு!